துணை தாசில்தார்கள் இடமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை கூடுதல் துணை தாசில்தார் காஜா கரிபுன் நவாஸ் கலெக்டர் அலுவலக எ.பிரிவு தலைமை உதவியாளராகவும், அங்கிருந்த முத்துலட்சுமி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டனர். அங்கிருந்த மீனா சேரன்மாதேவி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அங்கிருந்த மாரிச்செல்வம் கலெக்டர் அலுவலக கா பிரிவு தலைமை உதவியாளராகவும் இடமாறுதல் செய்யப்பட்டனர். இதேபோல் மொத்தம் 13 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுதவிர நெல்லை உதவி கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் குமரகுரு பாளையங்கோட்டை கூடுதல் துணை தாசில்தாராகவும், நில எடுப்பு முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆனந்த செல்வி கண்காணிப்பாளராகவும், கலெக்டர் அலுவலகம் முத்துப்பாண்டி மானூர் மண்டல துணை தாசில்தாராகவும், நாங்குநேரி பாலகிருஷ்ணன் ராதாபுரம் மண்டல துணை தாசில்தாராகவும், நதிநீர் இணைப்பு திட்டம் மணிவண்ணன் பாளையங்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், செல்ல பொண்ணு நாங்குநேரி மண்டல துணை தாசில்தாராகவும், ரெயில்வே திட்ட நில எடுப்பு மகாலட்சுமி கலெக்டர் அலுவலக வரவேற்பு தனி துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலகம் சங்கர் நாங்குநேரி வட்ட வழங்கல் அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.