35 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 35 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-08-01 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் 35 பேர், மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வானூர் தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரேவதி வானூர் தாலுகா குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், வானூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் நீலகண்டன், மயிலம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பானுப்பிரியா முகையூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கோவிந்தன் செஞ்சி குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனி தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கீதா திண்டிவனம் வடசிறுவளூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், வடசிறுவளூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் வினோத் சித்தலம்பட்டு குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், சித்தலம்பட்டு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் தேவராஜ் விக்கிரவாண்டி தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், விக்கிரவாண்டி தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் வளவனூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளராகவும், இவர்கள் உள்பட மொத்தம் 35 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்