20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2023-06-25 19:00 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏ.கே. லதா, தெர்மல்நகர் போலீஸ் நிலையத்துக்கும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு அனுசுயா தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பிரபு தெர்மல்நகருக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறை கணேசன் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், தூத்துக்குடி சிப்காட் சங்கர் புதியம்புத்தூருக்கும், கடம்பூர் சேட்டைநாதன் முறப்பநாடுக்கும், செய்துங்கநல்லூர் சதீஷ் முறப்பநாடுக்கும், முறப்பநாடு அந்தோணிராஜ் ஸ்ரீவைகுண்டத்துக்கும், ஸ்ரீவைகுண்டம் அருள் சாம்ராஜ் ஏரலுக்கும், முறப்பநாடு தேவசகாயம் சாயர்புரத்துக்கும், ஸ்ரீவைகுண்டம் பெபின் செல்வா பிரிட்டோ செய்துங்கநல்லூருக்கும், ஏரல் சுப்பிரமணியன் குரும்பூருக்கும், சூரங்குடி சுந்தரம் ஓட்டப்பிடாரத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

கோவில்பட்டி

இதேபோன்று கோவில்பட்டி கிழக்கு மாதவராஜா நாலாட்டின்புத்தூருக்கும், நாலாட்டின்புத்தூர் அங்குத்தாய் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கும், எட்டயபுரம் முருகன் விளாத்திகுளத்துக்கும், கழுகுமலை சதீஷ்குமார் எட்டயபுரத்துக்கும், ஓட்டப்பிடாரம் முத்துராஜா, குளத்தூருக்கும், சாத்தான்குளம் ஜான்சன் மெஞ்ஞானபுரத்துக்கும், மெஞ்ஞானபுரம் பால்மோனி சாத்தான்குளத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பிறப்பித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்