தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;
சென்னை,
தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல சைதாப்பேட்டை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் லாவண்யா, செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.