பல்வேறு இடங்களில் பணியாற்றிய 12 போலீசார் தாளவாடி போலீஸ் நிலையத்துக்கு ஒரே நாளில் மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடவடிக்கை

பல்வேறு இடங்களில் பணியாற்றிய 12 போலீசார் தாளவாடி போலீஸ் நிலையத்துக்கு ஒரே நாளில் மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடவடிக்கை

Update: 2023-06-07 20:23 GMT

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்த 12 போலீசார், தாளவாடி போலீஸ் நிலையத்துக்கு ஒரே நாளில் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பிறப்பித்தார். அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஜெயசங்கரமூர்த்தி, மூர்த்தி, கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பாலமுருகன், சித்தோடு-கோபால், பவானி-ரமேஷ், அம்மாபேட்டை-முருகன், பவானிசாகர்-முத்துமாணிக்கம், ஈரோடு டவுன் மதுவிலக்கில் பணியாற்றிய ராஜேந்திரன், செந்தில், ஆசனூர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றிய சாதிக் பாட்சா, கடத்தூர்-தினேஷ் குமார், கடம்பூர்-அசோக் ஆகிய 12 போலீசார், தாளவாடி போலீஸ் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நிர்வாக காரணத்துக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்