மதத்தை கடந்து மனிதநேயத்தோடு ஒன்றுபட்டு வாழ வேண்டும்

மதத்தை கடந்து மனிதநேயத்தோடு ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று கோவையில் நடந்த மதநல்லிணக்க கருத்தரங்கில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.

Update: 2023-01-30 18:45 GMT

மதத்தை கடந்து மனிதநேயத்தோடு ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று கோவையில் நடந்த மதநல்லிணக்க கருத்தரங்கில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.

மதநல்லிணக்க கருத்தரங்கு

இந்திய கலாசார நட்பு கழகம், பல்சமய நல்லுறவு இயக்கம் ஆகியவை சார்பில் கோவையில் மதநல்லிணக்க கருத்தரங்கு நடந்தது. இதற்கு பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த நாட்டை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மனித நேயத்தோடு நாம் இங்கு கூடி உள்ளோம். மனதில் அமைதி, உறுதி இருக்க வேண்டும். நாம் அனைவரும் மதத்தை கடந்து மனித நேயத்தோடு அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.

செயல்படுத்தி வருகிறோம்

அனைத்து மதத்திலும் நல்ல எண்ணங்கள், நல்லவைகள் தான் சொல்லப்பட்டு உள்ளது. ரத்த தானம், உறுப்பு தானத்தின் போது நாம் மதத்தை பார்ப்பது இல்லையே.

அதுதான் மதநல்லிணக்கம், மனிதநேயம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில் நாங்கள் அதை செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி ஜியாவுதீன், அனைத்து ஜமாத் தலைவர் முகமது அலி, கோவை மாவட்ட சிறுபான்மை நல அதிகாரி சுரேஷ்குமார், உப்பிலிபாளையம் ஜமாத் ஜலாலு தீன், அப்துல் ரகுமான், சாய்சாதிக், கோட்டை செல்லப்பா, வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அனைத்து கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த போதகர் சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்