தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான பிரசார ஊர்வலம் மடத்துக்குளத்தில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்முறைக்கு எதிராக பல்வேறு கட்ட பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார ஊர்வலம் நடைபெற்றது. மடத்துக்குளம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி தலைமை ஏற்று ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.மடத்துக்குளம் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது