சட்டம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊா்்வலம்

Update: 2022-11-11 15:23 GMT


தாராபுரத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆலோசனைக் குழுவின் உத்தரவின் பேரில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஊா்்வலம் தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. ஊா்வலத்ைத நீதிமன்ற வளாகத்தில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தொடங்கிவைத்தார். பிறகு அவர் விழிப்புணர்வு குறித்து கூறுகையில், சட்ட உதவி மையங்கள் செயல்படுவது குறித்து மாணவ-மாணவி்கள் தங்கள் பெற்றோர்களுக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை முன்கூட்டியே தவிர்த்துக் கொள்ளலாம் என்றார். பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.

ஊா்்வலம் தாலுகா அலுவலகம், பழைய நகராட்சி, போலீஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகம் வந்து நிறைவடைந்தது. அப்போது தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு, வழக்கறிஞர் சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் ராஜகோபால் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.கே.கார்வேந்தன், கே.செல்வராஜ், அரசு வழக்கறிஞர் ரா.உதயசந்திரன் மற்றும் தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்