மருத்துவ துறை கண்டுபிடிப்புகள் குறித்த பயிற்சி
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மருத்துவ துறை கண்டுபிடிப்புகள் குறித்த பயிற்சி நடந்தது.
தஞ்சாவூர்;
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் மற்றும் விலங்கியல் துறை மாணவர்களுக்கு மருத்துவ ஆராய்ச்சி மருந்து கண்டுபிடிப்பு, அதனை பயன்படுத்தும் முறை, மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் அதில் உள்ள சமூக கலாசார மனோவியல் பிரச்சினைகள் குறித்த 5 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். நான் முதல்வன் திட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமாரி நோக்கவுரை நிகழ்த்தினார். நான் முதல்வன் திட்ட தாவரவியல் துறை ஒருங்கிணைப்பாளர் சுபஸ்ரீ வரவேற்று பேசினார். முடிவில் விலங்கியல் துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுகுமாரன் நன்றி கூறினார். துறை தலைவர்கள் சாந்தி, சந்திரகலா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.