ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி

சமுதாய பண்ணை பள்ளி பயிற்றுனர்களுக்கு ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது.

Update: 2022-12-14 18:45 GMT

நாகையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து, சமுதாய பண்ணை பள்ளி பயிற்றுனர்களுக்கு ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் சுரேஷ் ஆடுகளுக்கு ஏற்படும் நோய்கள், அதை தடுக்கும் முறைகள், காப்பீடு செய்தல், சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆடுகளின் வகைகளை கண்டறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப வளர்ப்பது குறித்து பேசினார்.பயிற்சியில் பயிற்றுனர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டது. இதில் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மதிவாணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இளம் வல்லுனர் ஆகாஷ், வாழ்ந்து காட்டுவோம் வட்டார அணித் தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்