ஜல் ஜீவன் திட்டம் குறித்து சுகாதார குழுவினருக்கு பயிற்சி

காட்பாடியில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து சுகாதார குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-10-13 17:32 GMT

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு, பானிசமிதி குழு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில்நுட்பம் அல்லாத ஒரு நாள் பயிற்சி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி துறை உதவி இயக்குனர் வேல்முருகன் பயிற்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட வள மைய பயிற்றுனர் உத்திரபாரதி முன்னிலை வகித்தார்.

இதில், ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தும் விதம், தண்ணீர் மாசடைந்திருந்தால் அவற்றை சுத்தம் செய்யும் முறை, கூட்டுகுடிநீர் திட்டத்தை முறையாக வினியோகிப்பது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிக்கும் முறை, கழிவுநீரை முறையாக அகற்றுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியாளர்கள் கவிதா, கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்