அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடிகளை பராமரிப்பது குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடிகளை பராமரிப்பது குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-08-27 21:49 GMT

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு அருங்காட்சியகங்கள் தொடர்பான 5 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கற்சிற்பங்கள், ஆயுதங்கள், நாணயங்கள், உலோக திருமேனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட விலங்கினங்களை பராமரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை காப்பாட்சியர் வழங்கினார். தமிழக தொல்லியல் துறையின் மாநில சுவடிகள் பாதுகாப்பு குழுமத்தின் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஓலைச்சுவடிகள் தோற்றம், முக்கியத்துவம், வேதிப்பாதுகாப்பு முறைகள், ஓலைச்சுவடிகளை படித்தல் தொடர்பாக கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். நிறைவு நாளில் கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் பெரம்பலூரை சேர்ந்த மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத்துறை மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், பயிற்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்