கலைஞர் உரிமைத்தொகை திட்ட கள அலுவலர்களுக்கு பயிற்சி
அரியலூரில் கலைஞர் உரிமைத்தொகை திட்ட கள அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
வாணாபுரம்,
வாணாபுரம் தாலுகாவில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக கள அலுவலர்களுக்கான பயிற்சி அரியலூர் வட்டார வள மையத்தில் நடந்தது. இதற்கு வாணாபுரம் தாசில்தார் குமரன் தலைமை தாங்கினார். இதில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் அளித்துள்ளவர்களிடம் வீடுகளுக்கு நேரில் சென்று எவ்வாறு ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்பது குறித்து திட்ட கள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கள அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.