மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஜல்ஜீவன் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ் தலைமை வகித்தார். வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, குடிநீரை சுத்தமாக வழங்குவது, குடிநீர் மூலம் பரவும் டெங்கு மற்றும் மலேரியாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் உள்பட 12 பேர் கொண்ட குடிநீர் குழு ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அமைக்கப்படும். அதன் மூலம் பொது மக்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.