தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

வடலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

Update: 2023-07-23 18:45 GMT

வடலூர்

வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய பயிற்சி நடைபெற்றது.

கருங்குழி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிஜோசப் முன்னிலையில், ஆசிரியர் பயிற்றுனர் லட்சுமி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். கருத்தாளர்களாக, உள்மருவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்சரவணன், மருத்துவ குழுவினர்கள், மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் நந்தகுமார் ஆகியோர் மாணவர்களின் சுகாதாரம், உடல் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு, மன வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு சுகாதாரம் சார்ந்த கருத்துகளை மையமாக வைத்து பயிற்சி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்