மெட்ரிக் பள்ளி சாரண மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி
மெட்ரிக் பள்ளி சாரண மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூரில், மாவட்ட பாரத சாரண-சாரணியர் இயக்கம் சார்பில் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை பெரம்பலூர் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். முகாமிற்கு உடையார்பாளையம் கல்வி மாவட்ட பயிற்சி ஆணையர் சுவாமிநாதன் தலைவராக செயல்பட்டார். பெரம்பலூர் மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் செல்வராஜ், சாரணிய பயிற்சி ஆணையர் தனலட்சுமி உள்ளிட்டோர் மாணவ-மாணவிகளுக்கு இயக்க வரலாறு, சாரண சட்டம், உறுதிமொழி, சாரண இயக்க பாடல்கள், முதலுதவி, சைகை காட்டுதல், கூடாரம் அமைத்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். முகாம் நிறைவு விழாவில் மாவட்ட முதன்மை ஆணையரும், முதன்மை கல்வி அலுவலருமான அறிவழகன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மெட்ரிக் பள்ளி சாரண-சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.