விவசாயிகளுக்கு பயிற்சி

மருக்காலங்குளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-08-23 16:02 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் முதல்-அமைச்சரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன் அறிவுரையின்படி, மருக்காலங்குளம் கிராமத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் வரவேற்று பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் வேளாண்மை துறை சார்ந்த மானிய திட்டங்கள், பி.எம்.கிசான் திட்டம் குறித்து பேசினார்.

பஞ்சாயத்து தலைவர் மருதநாச்சியார் வாழ்த்தி பேசினார். வேளாண்மை ஓய்வு பெற்ற இணை இயக்குனர் வேலுச்சாமி, மானாவாரி வேளாண்மையில் கோடை உழவு, விதை ேநர்த்தி முறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறினார்.

இதில் உதவி வேளாண்மை அலுவலர் சுமன், மணிகண்டன், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகணேஷ், பூசைப்பாண்டியன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்