நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் உலக பருத்தி தினத்தை முன்னிட்டு பருத்தி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது வேளாண்மை துறையின் சார்பில் அனைத்து பயிர்களுக்கும் விதை மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும் நவீன எந்திரங்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பருத்தி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை கையாளும் விதங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் லலிதா, வேளாண்மை துறை இணை இயக்குனர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.