மண்டல ஆய்வாளர்களுக்கு பயிற்சி முகாம்

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் மண்டல ஆய்வாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-23 17:22 GMT

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டைக்கான மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மண்டல ஆய்வாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் அ.கீதா தலைமை தாங்கினார். மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார்.

முகாமை பயிற்சி கலெக்டர் பிரியா பார்வையிட்டு, மகளிர் உரிமை தொகை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள், வருவாய்த் துறையினர் ஆகியோரைக்கொண்டு மண்டல ஆய்வாளர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில், வட்டவழங்கல் அலுவலர் ஜனனி, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்