தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

பேரிடர் காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாமை கலெக்டர் ெதாடங்கி வைத்தார்.

Update: 2022-09-06 19:02 GMT

பேரிடர் காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாமை கலெக்டர் ெதாடங்கி வைத்தார்.

பயிற்சி முகாம்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 118 தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த 12 நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.இதன் தொடக்க விழா சிவகங்கை அருகே பாண்டியன் சரஸ்வதி யாதவா என்ஜினீயரிங் கல்லூரியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பேசியதாவது:-

பேரிடர் காலங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. எதிர்பாராதவிதமாக பருவமழைகளின் போது ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வதற்கு நாம் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

ஒத்திகை நிகழ்ச்சிகள்

அதே நேரத்தில் அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும் முழுமையாக தங்களது பங்களிப்பை அளித்து செயல்பட வேண்டும். கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள இளைஞர்கள் சமுதாய உணர்வுடன் செயல்பட வேண்டும். தங்களது பகுதிகளில் உள்ள நீர்நிலை அமைப்பு, மலைகளின் அமைப்பு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதிப்பு ஏற்படும் என்பதை சிந்தித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பேரிடர் நேரங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டியவைகள் குறித்தும், அச்சமயம் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கையேடு மற்றும் சீருடைகள் ஆகியவைகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் .சுகிதா, தாசில்தார்கள் .தங்கமணி, யாஸ்மின், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்