கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி
கிராம சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவின் சார்பாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஆயுஷ் மருத்துவத்தின் மூலம் நீரழிவு நோயை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதை வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு ஆஸ்பத்திரிகளை சேர்ந்த டாக்டர்கள் பிரியதர்ஷினி, அனுஷா, செல்வம், வனிதா, குழலி, முகமது அப்துல் ரஹீம், ஹரிஹரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமில் அரசு டாக்டர் கலாவதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.