அருப்புக்கோட்டையில் மாணவிகளுக்கு பயிற்சி முகாம்

மாணவிகளுக்கு மன அழுத்தம் நீக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update: 2023-10-18 23:40 GMT

அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் மாணவிகளுக்கு மன அழுத்தம் நீக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் தில்லை நடராஜன் தலைமை தாங்கினார். கணிதவியல் துறை பேராசிரியை பவுர்ணா வரவேற்றார். இதில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்த கணேசன் மன அழுத்தத்தை நீக்குவது பற்றி கூறினார். பிரம்ம குமாரி யோகேஸ்வரி தியானம் செய்வதை செயல்முறையாக செய்து காண்பித்தார். ஓய்வு பெற்ற கல்லூரி கணிதத்துறை பேராசிரியை சீதா லட்சுமி நேர்மறை எண்ணங்களின் முக்கியம் பற்றி விளக்கினார். இதில் கலைக்கல்லூரி செயலாளர் இளங்கோவன், சேர்மன் ராமச்சந்திரன், பி.எட்.கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை காமாட்சி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்