செம்பராம்பட்டில்விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
செம்பராம்பட்டில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வயல்வெளி பண்ணை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார். முகாமில் பண்ணை பள்ளியில் வேளாண்மை துறை மானிய திட்டங்கள் பற்றி வேளாண்மை அலுவலர் ஆனந்தன் விளக்கி பயிற்சி அளித்தார். இதில் அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் லோகபிரியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.