விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

சோ.நம்மியந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்;

Update:2022-07-15 18:32 IST

கீழ்பென்னாத்தூர்

வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோ.நம்மியந்தல் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், முதல்-அமைச்சரின் மானாவாரி பகுதி மேம்பாட்டு இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரன் தலைமை தாங்கி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.

உதவி வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரன், வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உயிர்உரங்கள், விதைகள் மற்றும் நுண்ணூட்ட கலவை பயன்கள் குறித்தும், உதவி தொழில் நுட்ப மேலாளர் வினோத்குமார் உளுந்து விதையில் உயிர்உரம், விதை நேர்த்தி செய்வது மற்றும் அட்மா திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர்.

அதைத்தொடர்ந்து அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மைய பேராசிரியை நிர்மலாகுமாரி முதல்-அமைச்சரின் மானாவாரி பகுதி மேம்பாட்டு இயக்கம் மற்றும் சிறுதானிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார்.

இதில் சோ.நம்மியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் சத்யாகார்த்திகேயன் உள்பட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்