மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் பயிற்சி முகாம்

தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் பயிற்சி முகாகமில் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.

Update: 2022-08-19 16:06 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் பயிற்சி முகாம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி முகாமில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் மத சார்பின்மை கொள்கைக்காக போராடினார். இப்போது மதசார்பின்மையின் அடையாளமாக மத கலவரத்திற்கு எதிராக நாம் போராடுவதற்கு காரணமாக காந்தி திகழ்கிறார். சாதி மறுப்பு கருத்தை தொடர்ந்து வலியுறுத்தியவர் காந்தி. மத சார்பின்மைக்காக கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்று பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்