நெல் பயிரில் பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி

நெல் பயிரில் பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது.

Update: 2022-11-08 18:45 GMT

எஸ்.புதூர், 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், உழவர் விரிவாக்க சீரமைப்பு மற்றும் அட்மா திட்டத்தின் மூலமாக பூச்சிகள் மற்றும் நோய்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி தர்மபட்டி கிராமத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி தலைமை தாங்கினார். உதவி விதை அலுவலர் பாலமுருகன் தொழில்நுட்பம் குறித்து எடுத்துக்கூறினார். வேளாண் அலுவலர் ராஜ்மிளாதேவி பூச்சிகள் மற்றும் நோய்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களான பருவம் மற்றும் ரகங்கள், விதை நேர்த்தி, நாற்றாங்கால் பருவத்தில் பயிரை தாக்கும் நோய்கள், இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகம், ரசாயன முறை மற்றும் உயிரியல் கட்டுப்பாடுமுறை தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீரங்க செல்வி நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் வரப்பு பயிராக பயறு வகைகள் சாகுபடி செய்யும் முறைகள் குறித்த செயல்விளக்கம் அளித்தார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்