நாமக்கல்லில் சிறப்பு பயிற்றுனர்களுக்கான சைகை மொழி பயிற்சி

நாமக்கல்லில் சிறப்பு பயிற்றுனர்களுக்கான சைகை மொழி பயிற்சி

Update: 2022-07-28 18:03 GMT

நாமக்கல்:

செவித்திறன் குன்றிய மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக சிறப்பு பயிற்றுனர்களுக்கு சைகை மொழி பயிற்சி நாமக்கல் திட்ட அலுவலகத்தில் நடந்தது. முதல் கட்ட பயிற்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அதில் 15 ஒன்றியத்தில் உள்ள சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் இயன்முறை பயிற்றுனர்கள் 73 பேர் கலந்து கொண்டனர்.

கோவை இந்திய சைகை மொழி பெயர்ப்பாளர்கள் சங்கத்தினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிங்கு நாம் தேவ், மதுரை தெரசா ஆகியோர் சைகை மொழி பயிற்சி அளித்தனர். செவித்திறன் குன்றிய குழந்தைகளுக்கு, ஆரம்ப காலத்தில் இருந்து இந்த பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் புகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். 2-ம் கட்ட பயிற்சி ஆகஸ்டு 8-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்