கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது பரிதாபம்: கார் மோதி நேபாள பெண் பலி
கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது கார் மோதி நேபாள பெண் பரிதாபமாக இறந்தார்.
நேபாள நாட்டை சேர்ந்த 24 பெண்கள் உள்பட 35 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று வர ஒரு பஸ்சில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு சாப்பிடுவதற்காக உணவு சமைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுடன் பயணம் செய்த நேபாளம், சர்லாஹி மாவட்டம், வினயேஹரிபூர்வாவை சேர்ந்த கைலாசின் மனைவி மந்துடியா தேவி (வயது 60) இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் மந்துடியா தேவி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அவருடன் சுற்றுலா வந்திருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மந்துடியா தேவி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.