வலங்கைமான் கடைத்தெருவில் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி

வலங்கைமான் கடைத்தெருவில் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ககிறார்கள்.

Update: 2022-07-26 17:31 GMT

வலங்கைமான் கடைத்தெருவில் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்ககிறார்கள்.

போக்குவரத்துக்கு இடையூறு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெரு கும்பகோணம்- மன்னார்குடி மெயின் சாலையில் உள்ளது. இந்த கடைத்தெரு உள்ள மெயின் சாலையின் குறுக்காக திருவாரூர்-தஞ்சாவூர் மெயின் சாலை அமைந்துள்ளதால், 4 புறங்களில் இருந்தும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் கடைத்தெரு பகுதி எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படுகிறது. 4 புறங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையான மன்னார்குடி- கும்பகோணம் சாலையில் விதிகளை மீறி செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் தினசரி அவதிப்பட வேண்டி உள்ளது. சாலையில் பள்ளி, அலுவலக நேரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அத்தியாவசிய வாகனங்களான தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்