பக்தர்களின் வருகையால் போக்குவரத்து பாதிப்பு
பக்தர்களின் வருகையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
பக்தர்களின் வருகையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேல்மருத்தூர் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து மேல்மருத்தூர் கோவிலுக்கு பல்வேறு குழுக்களாக பஸ்களில் பயணிக்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் அரியூர் ஸ்ரீபுரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக ஸ்ரீபுரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. கோவிலில் இருந்து நீண்ட தூரம் வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலையிலும் ஏராளமான வாகனங்கள் ஸ்ரீபுரத்துக்கு வந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று அணிவகுத்து ஊர்ந்து சென்றது.
அரியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் சிகப்பு நிற உடை அணிந்த பக்தர்களாகவே காணப்பட்டனர்.