அடிக்கடி ெரயில்வே கேட்டை மூடுவதால் போக்குவரத்து நெரிசல்

அடிக்கடி ெரயில்வே கேட்டை மூடுவதால் போக்குவரத்து நெரிசல்;

Update:2023-05-09 00:15 IST

திருத்துறைப்பூண்டியில் அடிக்கடி ரெயில்வே கேட்டை மூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் ெரயில்வே கேட் உள்ளது. மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த பொதுமக்கள் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் நாகூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் அடிக்கடி திருத்துறைப்பூண்டி ரெயில்ேவ கேட்டை மூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் நீண்டநேரம் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுடன் அணிவகுத்து நிற்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி அவதியடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் போக்குவரத்து நெரிசலால் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் உள்ளது. எனவே திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உடனடியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே மேம்பாலம்

இதுகுறித்து திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வக்கீல் வி.வி.செந்தில்குமார் கூறியதாவது:-

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஒரே வழி மேம்பாலம் கட்டுவது மட்டுமே. ெரயில்வே மேம்பாலம் கட்டவில்லை என்றால் வாகன ஓட்டிகள் சிரமத்தை தான் சந்திக்க வேண்டும். திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மிகுந்த போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறது. எனவே கால தாமதம் இன்றி மத்திய-மாநில அரசுகள் உடனடியாக ெரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்