சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
லால்குடி:
லால்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் திருச்சி-அரியலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு சென்று பொக்லைன் எந்திரங்கள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சரி செய்தனர்.