காற்றாலை விசிறியை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

காற்றாலை விசிறியை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2022-08-07 00:05 IST

சேலம் பகுதியில் இருந்து சுமார் 300 அடி நீளத்தில் காற்றாலை விசிறியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று மதியம் கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் சோதனை சாவடி அருகே லாரி வந்தபோது திரும்ப முடியாமல் நின்றது. இதனால் நீண்ட நேரம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதனைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்