வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.;
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வணிகவரி துறையினரால் நடத்தப்படும் டெஸ்ட் பர்ச்சேஸ் என்று அடிப்படையில் கடைகளில் நடைபெறும் அத்துமீறலை ரத்து செய்ய வேண்டும், வாகன விதிமீறல் என்ற பெயரில் நடைபெறும் அதிரடி நடவடிக்கையை தடை செய்ய வேண்டும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளதுபோல், மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிட வேண்டும், மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், சுங்கச்சாவடியின் கட்டணத்தை குறைத்து வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட மத்திய-மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை நிறைவேற்றக்கோரி வருகிற 20-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.