அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி சாவு

பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்தார்.

Update: 2023-07-09 21:33 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையை அடுத்த ராசியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது60), நண்டு வியாபாரம் செய்து வந்த அவர், நேற்று காலை 6 மணி அளவில் வியாபாரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சி-அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் ராசியங்காடு கிளை ரோடு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீரமுத்து உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமுத்து மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்