ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சடையன்வலசை ஆற்று படுகையில் பதிவெண் இல்லாத டிரைலருடன் கூடிய டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டிருந்தது தெரிந்தது. போலீசார் அங்கு சென்றபோது டிராக்டரை மணலுடன் நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக சடையன்வலசையை சேர்ந்த கதிரேசன், ஹரிகரசுதன் ஆகியோரை தேடிவருகின்றனர்.