அனுமதியின்றி அள்ளி வந்த மணலுடன் டிராக்டர் பறிமுதல்

திருப்புல்லாணி அருகே அனுமதியின்றி அள்ளி வந்த மணலுடன் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-12 18:45 GMT

 திருப்புல்லாணி அருகே உள்ள பெரிய பட்டினம் கடற்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனையிட முயன்றபோது போலீசாரை கண்டதும் டிராக்டரை நிறுத்திவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். அதில் சோதனையிட்டபோது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து பதிவெண் எழுதப்படாத டிராக்டரை மணலுடன் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்