பொம்மை கடை விற்பனையாளர் தற்கொலை
பொம்மை கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா ஊசிமலை வீதியூரை சேர்ந்த சிவலிங்கம் மகன் கார்த்திக் (வயது 24). இவர் சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அறையில் தங்கி பொம்மை கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கார்த்திக் தான் தங்கியிருந்த அறையில் இரும்பு பைப் கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.