விடுமுறை நாளையொட்டி அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

விடுமுறை நாளான இன்று அகஸ்தியர் அருவியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.;

Update:2022-07-17 16:32 IST

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், ஆன்மீக அருவியாக இருப்பதாலும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் அகஸ்தியர் அருவிக்கு வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்