ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்... கடும் போக்குவரத்து நெரிசல் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாத்தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

Update: 2023-06-11 10:01 GMT

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாத்தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஒகேனக்கலில் கடந்த இரண்டு மாதங்களாக கோடைகால சீசன் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்று கோடை விடுமுறையின் இறுதி நாள் என்பதாலும் வாரவிடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் பரிசல் பயணத்திற்கு கடந்த மாதம் வரை ரூ.750 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1,500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டண உயர்வையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு மசாஜ் செய்தும், மீன் சமையல் உண்டும், நீர்வீழ்ச்சியில் குளித்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்