வார இறுதி விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
தென்காசி,
விடுமுறையில் குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். அதிகமான கூட்டம் குவிந்ததால் குறைவாக விழுந்த தண்ணீரில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்துச் சென்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அங்குள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், குற்றாலத்தில் குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தற்போது வரத்தொடங்கியுள்ளனர்.
மேலும் நேற்று வார இறுதி விடுமுறை தினம் என்பதால் அதிக அளவிலான கூட்டம் அனைத்து அருவிகளிலும் காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் வரிசையில் நின்று குளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஐந்தருவி பகுதியில் அதிகமான கூட்டம் காரணமாக அருவியில் இருந்து சுமார் 500 மீட்டர் வரை வரிசையில் ஆண்களும் பெண்களும் நின்று குளித்து சென்றனர்.