பூண்டி ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

Update: 2022-12-14 05:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. 1944-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரி சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியன் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், ஜமீன்கொரட்டூர், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டோஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் நீர்வரத்து அதிகமாகி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

அணையின் பாதுகாப்பு கறுதி கடந்த 9-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. பூண்டி ஏரி பகுதி இயற்கை எழில் மிகுந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதையும், மதகுகள் வழியாக தண்ணீர் சீறி பாய்வதையும் காண நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்