குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

Update: 2022-09-04 16:29 GMT

குற்றாலத்தில் தற்போது சீசன் முடிந்துவிட்டது. இருப்பினும் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் அடித்தது. இருப்பினும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்