நெய்யருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குண்டாறு அருகே நெய்யருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை குண்டாறு அணை அருகே நெய்யருவி அமைந்துள்ளது. தற்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால், ஏராளமான சுற்றுலா பயணிகள் நெய்யருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் இந்த அருவிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கிறார்கள். ஆனால் இந்த அருவிக்கு செல்ல போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.