மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பவானிசாகர் அணை காட்சி முனை அருகே பேருந்து வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.;

Update:2024-05-03 22:12 IST

கோவை,

மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

முன்னதாக சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் இருந்து சிலர் உதகைக்கு மினி பேருந்தில் சுற்றுலா சென்றனர். இந்த நிலையில் பேருந்து, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில், பவானிசாகர் அணை காட்சி முனை அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்