குடியிருப்புக்குள் புகுந்த அரியவகை நட்சத்திர ஆமை
குடியிருப்புக்குள் அரியவகை நட்சத்திர ஆமை புகுந்தது.;
முத்துப்பேட்டை அருகே தெற்குகாடு மங்கலூர் சின்ன ஏரி பின்புறம் பகுதியில் குடியிருப்பு உள்ளது. நேற்று இந்த பகுதியை சேர்ந்த மாரிமுத்து வீட்டிற்குள் ஆமை ஒன்று புகுந்தது. இந்த ஆமை அரியவகை நட்சத்திர ஆமையாகும். அதன் மேல் பகுதி தங்க நிறத்தில் ஜொலித்தது. இதை மாரிமுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்து முத்துப்பேட்டை வனக்காப்பாளர் சிவநேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி, வனச்சரக அலுவலர் ஜனனி ஆகியோரின் உத்தரவின்பேரில் அங்குவந்த வனக்காப்பாளர் கணேசனிடம் ஆமை ஒப்படைக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட அவர் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் விட்டார். அங்கு வனத்துறையினர் அரிய வகை ஆமையை பராமரித்து வருகின்றனர்.