தவுட்டுப்பாளையம் பகுதியில் சாரல் மழை
தவுட்டுப்பாளையம் பகுதியில் சாரல் மழை பெய்தது.
தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், கட்டிப்பாளையம், திருக்காடுதுறை, நத்த மேட்டுப்பாளையம், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
அதேபோல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.