மகிளா காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு: மகிளா காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
சீர்காழி:
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் மகிளா காங்கிரஸ் சார்பில் கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சித்ரா செல்வி தலைமை தாங்கினார். நகர தலைவர் லட்சுமணன், வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஞானசம்மந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து அனைவரும் கையில் தீப்பந்தம் ஏந்தி ேகாஷம் எழுப்பினர்.ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு: