திருச்சியில் ஜோதி ஓட்டம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சியில் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2022-07-26 19:09 GMT

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு மதுரையில் இருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று காலை கலெக்டர் பிரதீப் குமார் பெற்று கொண்டு, அதனை விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், காவலர்கள் உள்ளடங்கிய ஜோதி ஓட்டக்குழுவினரிடம் வழங்கி திருச்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஜோதி ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி, கலெக்டர் அலுவலக முகாம் வழியாக மன்னார்புரம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி வளாகம், ரெயில்வே ஜங்ஷன் மேம்பாலம், தலைமை தபால்நிலையம், மகாத்மா காந்தியடிகள் சிலை ரவுண்டானா, மாநகராட்சி சாலை, கோர்ட்டு ரோடு, சாலைரோடு, காவிரிப்பாலம், அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் முக்கொம்புவரை சென்று பின்னர் மாவட்ட விளையாட்டு அரங்கம் வந்தடைந்தது. இந்த ஜோதி மாலையில் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மேயர் அன்பழகன், போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்ரீதேவி, அன்பு, விளையாட்டுத்துறை முதுநிலை மண்டல மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்