நாளை மின் நிறுத்தம்

சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

Update: 2023-02-02 20:50 GMT

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதி மின் பாதைகளில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவேநாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி துணை மின் நிலைய பகுதிகளான நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன்வயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால், திருச்சிற்றம்பலம், குறிச்சி, வாட்டாத்திகொல்லை, ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.வடசேரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குன்னம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்